குற்றங்களின் பின்னணியை ஆராயும் போது கிடைக்கும் தகவல்கள் உண்மையாக நம்பவைக்கப்பட்டிருப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.அதன் சூத்திரதாரியை அறிந்து கொள்ளும்போது அரசியலின் வலிமையைத் தெரிந்து கொள்ளமுடியும். காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடி கண்டுபிடிக்கப் பல நாடுகள் முயல்கின்றன.அதை கண்டுபிடிக்க முடியாமல் போனாலும் எதற்காக மாயமாக மறைந்தது என்பதற்கான ஆதாரத்தைத் தேடி அலைவது தான் இந்த நாவலின் களம். சிபிஐ சேர்ந்த நால்வர் கிடைத்த தகவலின்படி சிங்கப்பூரில் இருக்கும் தகவல்கள் அடங்கிய மைக்ரோ பென்டிரைவை இந்தியாவிற்குக் கடத்தி வருகின்றனர். சிங்கப்பூர் போலீஸ் அதிகாரிகளுக்கும் அந்தப் பென்டிரைவ் தேவைப்படுவதால் சிபிஐ அதிகாரிகளை அவர்களின் கண்காணிப்பு வட்டத்தில் வைத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். அமெரிக்காவும் பணத்தைக் காட்டி சிபிஐயில் வேலை செய்பவர்களை விலைக்கு வாங்கி அந்தப் பென்டிரைவை அடைய முயல்கிறது. விமானத்தை அழிக்கும் வழிமுறைகள் அடங்கிய பென்டிரைவை கைப்பற்ற போராடும் கும்பல்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களைப் பயப்படச் செய்து தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளும் போது மலேசிய இராணுவ அதிகாரியின் தலையீடு நுழைகிறது. காணாமல் போன விமானத்தில் இருக்கும் நால்வர் உலகத்தை அழிக்கக் கூடிய விஞ்ஞானத்தைக் கடத்தப்போவதை அறிந்த மலேசிய அரசாங்கம் இராணுவ வீரர்களைப் பயணிகளாக அனுப்பித் தங்களின் கட்டுபாட்டிற்குள் அதை கொண்டு வந்த நேரத்தில் அந்த நால்வரும் விஷம் சாப்பிட்டு இறந்து போனதால் விமானக் கடத்தல் நாடகம் அப்படியே உலகத்தின் பார்வையில் விட்டு விட்டு அந்த விமானத்தில் பயணம் செய்த இராணுவ வீரர்கள் தங்களின் வேலையைத் தொடர்கின்றனர். பேராபத்தை உண்டாக்கும் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு தீயவர்களின் கைகளுக்குச் செல்லாம் தடுத்து நிறுத்தப்படுகிறது.
Book Title வெல்வெட் குற்றங்கள் (Velvet kuttrangal)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher Rajesh kumar publishing (Rajesh kumar publishing)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back