Kazhivarai Irukkai / கழிவறை இருக்கை (9788194303022)
"கழிவறைஇருக்கை"யின் மூலப்புத்தகமான The Toilet Seat குறித்து அருணா என்ற வாசகரின் கருத்து: லதா அவர்களின் எழுத்துக்கள் அதீத முற்போக்குத்தனமாய் சிலருக்கு தோன்றலாம்.. நமக்கு ஒத்துவராது என்று சிலர் ஒதுங்கலாம். ஆனால் மூடி மறைக்கப்படும் வாழ்வியல் முரணை புத்தகமாக்கியிருக்கிறார். இவரைப்போன்ற தைரியம் எல்லா பெண்களுக்கும் சாத்தியமில்லை. நான் இவரை Wonder Woman என மனதுக்குள் அழைத்துக்கொள்வேன். ஆண்- பெண்; கணவன் - மனைவி என்ற வரையறை தாண்டிய உளவியல், மற்றும் உடலியல் சார்ந்த தேடலும் ஆறுதலும், மனிதனை முகமூடியுடன் திரியவைக்கும் குடும்ப அமைப்புகளும், வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கின்றன. இங்கு ரகசியங்களே வாழ்வு. வாழ்க்கையை நாம் அடுத்தவர் அபிமானத்திற்கே வாழ பழக்கப்பட்டிருக்கிறோம். ஆண் பெண் இருவரும் வெவ்வேறு வகையில் ஒருவரை ஒருவர் அடக்கவும் ஆக்கிரமிக்கவும் ஆவலும் காவலும் புரிகின்றோம்.. இந்தப் புத்தகம் ஆண்களின் வக்கிர வில்லத்தனத்தையும் பெண்களின் பிடிவாத பழைய கோட்பாடுகளையும் அலசிப்போட்ட புத்தகம்.
Kazhivarai Irukkai கழிவறை இருக்கை | The Toilet Seat
ISBN Code 9788194303022
Book Category Regional Books
Book Sub-Category Tamil Books
Author Name லதா
Publisher Name Knowrap Imprints