Pani Manithan / பனி மனிதன் (9788184933857)
பனி மனிதன் -இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தைகளையும் இப்போது என் குழந்தைகளாகவே நினைக்கிறேன். இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதி இருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு தேறிய ஒரு குழந்தை இதை வாசிக்க முடியும். இந்த நாவல் வெறும் குழந்தைக்கதை அல்ல. இதில் தத்துவம், ஆன்மிகம், அறிவியலும் உள்ளன. இந்தப் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்ன என்ற கேள்வி உள்ளது. அந்தக் கேள்வி பெரியவர்களுக்கும் உரியது. அவர்களும் இந்நாவலை விரும்பி வாசிக்கலாம். அவர்களை அது சிந்திக்க வைக்கும்.ஜெயமோகன் (ஆசிரியர்)
ISBN: 9788184933857
Page: 256
Language: Tamil
Publisher: கிழக்கு பதிப்பகம்